புகையிலை பொருட்களை விற்க தடை: துண்டு பிரசுரங்கள் வினியோகித்த போலீசார்

புகையிலை பொருட்களை விற்க தடை: துண்டு பிரசுரங்கள் வினியோகித்த போலீசார்
X

துண்டு பிரசுரங்கள் வினியோகித்த காவல் துறையினர்.

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்க கூடாது என கடைகளுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகித்த காவல் துறையினர்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை ஒரு சில மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை தடுக்கும் வகையில் எடப்பாடி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று எடப்பாடி பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கடைகளில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னன்னன் தலைமையில் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!