எடப்பாடியில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

எடப்பாடியில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

காவல்துறையினர் சார்பில், எடப்பாடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காவல்துறையினர் சார்பில், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, எடப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஜூன் 26 ஆம் தேதி, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையொட்டி, இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்துறை சார்பில், காவல் ஆய்வாளர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் பெரியதம்பி முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

எடப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பதாகைகள் வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், எடப்பாடி பேருந்து நிலையம், சேலம் ரோடு, பூலாம்பட்டி ரோடு, ஆகிய பகுதிகளில் பதாகைகள் வைத்து விழிப்புணர்வு செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!