கை மணிக்கட்டு எலும்பில் தோன்றிய அறிய வகை புற்றுநோயை அகற்றி மருத்துவர்கள் சாதனை
எடப்பாடி அரசு மருத்துவமனையில் அரிய வகை புற்றுநோயை அகற்றி சாதனை படைத்த டாக்டர் இமாம் தலைமையிலான மருத்துவ குழுவினர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை சேர்ந்த அய்யமாள் தனது வலது மணிக்கட்டில் 6 மாத காலமாக வலியால் அவதிபட்டு வந்த நிலையில் எடப்பாடி அரசு மருத்துவமனையில் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் இமாமிடம் ஆலோசனை பெற்றார்.
அவரை சோதனை செய்து பார்த்ததில், அவருடைய கை மணிக்கட்டு எலும்பில் Giant Cell Tumour எனப்படும் அரியவகை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. உடனே மருத்துவ அலுவலர் அனுமதி பெற்று டாக்டர் இமாம் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டின் கீழ் அந்த புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியது மட்டுமல்லாமல், வலது மணிக்கட்டின் செயல்பாடு தடைபெறாமல் இருக்க Bone Graft எனப்படும் எலும்பு ஒட்டும் சிகிச்சையையும் வெற்றிகரமாகச் செய்தனர்.
இதற்கு முன்பாகவே டாக்டர் இமாம் தலைமையிலான மருத்துவ குழு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஏழை கூலித்தொழிலாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டின் கீழ் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu