/* */

எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பருவ மழை கால முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மழை காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் கலைவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பருவ மழை கால முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்
X

எடப்பாடி தாலுகாவில் மழை காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் கலைவது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பூலாம்பட்டி கோனேரிப்பட்டி, நெடுங்குளம் காவிரி கரையோர பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, பேரூராட்சி, காவல்துறை, உள்ளாட்சித்துறை, வேளாண் துறை ஆகிய அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வேடியப்பன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பாதிப்புகள் எந்த பகுதியில் அதிகமாக ஏற்படும் என்பது குறித்தும் அதை ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டு பாதிப்புகளை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி வட்டாட்சியர் விமல் பிரகாசம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மாமியார் கதையை முடித்த மருமகள், ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
  2. நாமக்கல்
    பிள்ளாநல்லூரில் கூட்டுறவுத்துறை மூலம் ரத்த தான முகாம்
  3. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  4. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  5. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை