கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.80 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம் விற்பனை

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.80 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம் விற்பனை
X

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள்.

சேலம், கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.80 லட்சத்திற்கு பருத்தி,எள் ஏலம் விற்பனையானது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் கிளை செயல்பட்டு வருகிறது. அங்கு, இன்று நடைபெற்ற பருத்தி, எள் ஏலத்தில் விவசாயிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்திற்கு, சேலம் மாவட்ட விவசாயிகள் மட்டுமே தங்கள் விளைநிலங்களில் விளையும் பருத்தி, எள், கொண்டு வந்து ஏலத்தில் மூலமாக விற்பனை செய்து வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் இருந்து 3500பருத்தி மூட்டைகளை கொண்டுவந்து 600 லாட்டுகளாக வைத்து ஏலம் விடப்பட்டது.

பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 6309 முதல் அதிகபட்சமாக ரூ 7100 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ 8600 முதல் அதிகபட்சமாக ரூ9269 வரையிலும், விலை விற்று தீர்ந்து மொத்தம் 70 லட்சத்திற்கு போனது.

எள் டெண்டரில் கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி சுற்றுவட்டார விவசாயிகளால் 150 மூட்டைகள் எள் கொண்டுவரப்பட்டு டெண்டரில் வெள்ளை எள் ரூ 81.90 முதல் 98.50 வரையிலும், சிவப்பு எள் ரூ 75.00முதல் ரூ 84.80 வரையிலும் 10 லட்சத்திற்க்கு விற்பனை நடைப்பெற்றது. அடுத்த டெண்டர் 9.07.2021 நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு