கோம்புக்காடு கிராம மக்கள் சாலை வசதி கோரி ஆர்ப்பாட்டம்
துண்டிக்கபப்ட்ட சாலையில் நின்று கொண்டிருக்கும் பொதுமக்கள்.
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதி எல்லையான பக்கநாடு கிராமம், கோம்புக்காடு மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறையாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் இவர்கள், அத்தியாவசிய தேவைக்காக ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பக்கநாடு கிராமத்திற்கு வரவேண்டியுள்ளது. அவ்வாறு வந்து செல்வதற்கு கூட சரியான சாலை வசதி இல்லாமல் மற்றவர்களின் தோட்டம் வழியாக வந்து செல்கின்றனர். இதனால் அவ்வப்போது வழிதட பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
இதனால் வழிதட பிரச்சனைகளை சரி செய்வதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் அவரவர் தோட்டங்களில் இடம் விட்டு அனைவரும் சேர்ந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தற்காலிக சாலை அமைத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சாலை வழியையும் அருகிலுள்ள மற்றொரு தோட்டக்காரர் இன்று துண்டித்ததால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் கோம்புக்காடு கிராமத்துக்கு உறவினராக வந்தவர்கள் திரும்பி போக முடியாமலும், அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் என அனைவரும் செல்வதற்கு வழி இன்றி தவித்தனர்.
இதனை அறிந்த பூலாம்பட்டி வருவாய் ஆய்வாளர் வனஜா, பூலாம்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் முனிராஜ் அங்கு விரைந்து வந்து அப்பகுதி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அடைக்கப்பட்ட பாதையை மீண்டும் தற்காலிக வழிப்பாதையாக ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் மற்றும் நிரந்தர வழி பாதை அமைத்துக் கொடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu