ஜெ., முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கொலை வழக்கு விசாரணை மீண்டும் துவக்கம்

ஜெ., முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கொலை வழக்கு விசாரணை மீண்டும் துவக்கம்
X

சேலம் எஸ்பி ஸ்ரீ அபிநவ்.

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் எஸ்பி ஸ்ரீ அபிநவ் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழப்பைத் தொடர்ந்து கோடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக 2017 ஏப்ரல் மாதத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் விசாரணை நடைபெற்று முடிந்தது.

கனகராஜ் உயிரிழந்த சம்பவம் சாலை விபத்து என்று கூறப்பட்ட நிலையில் கனகராஜ் அண்ணன் தனபால் அதை மறுத்தார். கனகராஜ் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தனபால் கூறியிருந்தார். இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!