எடப்பாடி நகராட்சியில் 250 குடும்ப அட்டை வழங்கல்

எடப்பாடி நகராட்சியில்  250 குடும்ப அட்டை வழங்கல்
X

பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கிய எம்பி பார்த்திபன்.  

எடப்பாடி நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் 250 குடும்ப அட்டைகளை வழங்கினார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற உடன் குடும்ப அட்டை இல்லாதவர்கள் விண்ணபித்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்காவில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 750 குடும்ப அட்டைகள் எடப்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வரப்பெற்றது.

அவ்வாறு வரப்பெற்ற குடும்ப அட்டைகளை இன்று எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு, மேட்டுத்தெரு ஆகிய இடங்களில் நடைப்பெற்ற விழாவில் சேலம் பாராளும்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!