தாதாபுரம் ஊராட்சியின் 9 வாக்குச்சாவடிகளிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு
தாராபுரம் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தாராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், தாதாபுரத்தில் 3 வாக்குச்சாவடிகள், மெய்யம்பாளையத்தில் 2 வாக்குச்சாவடிகள், மணியக்காரன் பாளையத்தில் 2 வாக்குச்சாவடிகள், கார்த்திகணக்கனூரில் 2 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 9 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இந்தநிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட திமுகவை சேர்ந்த அரசி மாதையன் தற்பொழுது நடைபெறும் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் அவரே மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு பெட்டிகள் கடத்தப்பட்டு வாக்குச்சீட்டுகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு எடப்பாடி அருகே உள்ள சரபங்கா நதியில் வீசப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து மீண்டும் மறு தேர்தல் நடத்தப்பட்டு திமுகவை சேர்ந்த அரசி மாதையன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் நாளை நடைபெறும் தலைவர் பதவிக்கான தாதாபுரம் ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் மீண்டும் அரசி மாதையன் போட்டியிடுவதால் கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற அசம்பாவிதங்கள் போல் தற்போதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக 9 வாக்குச்சாவடி மையங்களும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மூங்கில் தடுப்புகள் அமைத்து அதிகளவில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu