எடப்பாடியில் நெடுஞ்சாலைகளின் ஓரம் தூர்வாரும் பணிகள் தீவிரம்

எடப்பாடியில் நெடுஞ்சாலைகளின் ஓரம் தூர்வாரும் பணிகள் தீவிரம்
X

சங்ககிரி - மேச்சேரி மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் நெடுஞ்சாலையின் ஓரம் தூர்வாரும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

வட கிழக்கு பருவமழை தொடங்கயிருப்பதை முன்னிட்டு, எடப்பாடி நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக சங்ககிரி - மேச்சேரி மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மழை நீர் வடிகால் அமைப்புகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

வரும் 25 ந்தேதி வரை 5 கட்டமாக நடைபெறும் இப்பணியினை உதவிப் பொறியளர் அருள் செல்வம் எடப்பாடி கோட்ட பொறியாளர் சண்முக சுந்தரம் துவக்கி வைத்தனர்.

இந்த பணிகளில் 25க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி