பெண்களை இழிவாக பேசினால் கட்சியை விட்டு நீக்குவோம் - அன்புமணி ராமதாஸ்

பெண்களை இழிவாக பேசினால் கட்சியை விட்டு நீக்குவோம் - அன்புமணி ராமதாஸ்
X
எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் யாராவது, ஆ.ராசாவை போல பெண்களை இழிவாக பேசி இருந்தால் கட்சியை விட்டு நீக்கி இருப்போம் என்று சேலத்தில் அன்புமணி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேருந்து நிலையம் அருகில், பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அன்புமணி பேசியதாவது:

நாமெல்லாம் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம், ஆனால் திமுக பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப் படுத்துகிறது. ஆ.ராசா முதலமைச்சரின் தாயார் பற்றி பேசியிருப்பது மன்னிக்க முடியாதது.

இதை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. மாறாக ஒரு தாயை இழிவாக பேசியதை ஸ்டாலின் ரசிக்கிறார். எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் யாராவது, ஆ.ராசாவை போல பெண்களை இழிவாக பேசி இருந்தால் கட்சியை விட்டு நீக்கி இருப்போம்.

ஆ.ராசா மட்டுமல்ல, பெண்களை பற்றி கொச்சையாக லியோனி பேசுகிறார். கலைஞரின் மகன் என்பதை தவிர ஸ்டாலினுக்கு வேறு எந்த தகுதியும் கிடையாது. சில மீடியாக்கள் மட்டுமே ஸ்டாலினை பெரிதாக தூக்கிவைத்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினுக்கு பொதுமக்களிடம் எந்த ஆதரவும் இல்லை என்று தெரிவுத்தார்.

அத்திகடவு அவினாசி திட்டம், 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து, உள்ளிட்ட ராமதாஸ் வலியுறுத்திய அனைத்தையும் முதலமைச்சர் செய்து முடித்திருக்கிறார். திமுக வை டெபாசிட் இழக்க செய்து, எடப்பாடியில் முதலமைச்சருக்கு வாக்களித்து, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றபெற செய்யுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!