அரசு பஸ்- இருசக்கர வாகனம் மோதல்: கணவன் கண் முன்னே மனைவி சாவு

அரசு பஸ்- இருசக்கர வாகனம் மோதல்: கணவன் கண் முன்னே மனைவி சாவு
X

விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து.

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி ராதாவுடன் சேலத்தில் 4ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினருக்கு குழந்தை பிறந்ததால் அவரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அடுத்த குழந்தை இயேசு பேராலயம் எதிரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் சந்திரன் கண்முன்னே அவரது மனைவி ராதா பேருந்து டயர் மேலே ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் சந்திரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினரின் குழந்தையை பார்க்கச் சென்ற இடத்தில் கணவர் கண் முன்னே மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
why is ai important to the future