காந்தி ஜெயந்தி: பாஜக சார்பில் காந்தி, காமராஜர் சிலைக்கு மரியாதை

காந்தி ஜெயந்தி: பாஜக சார்பில் காந்தி, காமராஜர் சிலைக்கு மரியாதை
X

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பாஜகவினர்.

பாஜக சார்பில் எடப்பாடி பஸ் நிலையம் அருகேயுள்ள காந்தி, காமராஜர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு

காந்தி ஜெயந்தி இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எடப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி மற்றும் காமராஜர் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து தீண்டாமையை ஒரு நாளும் கடை பிடிக்க மாட்டேன், மதுவிலக்கை முழுமையாக கடைப்பிடிப்பேன், ஆண் பெண் சமத்துவத்தை கடைப்பிடிப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த உறுதிமொழி ஏற்பு விழாவில் எடப்பாடி நகர பொதுச்செயலாளர் சிவலிங்கம் ஆடிட்டர் பரமேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!