வாய்க்காலில் வந்த தண்ணீரை கிடா வெட்டி மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்
வாய்க்கால் தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்
மேட்டூர் அணையிலிருந்து இடது மற்றும் வலது கரை கால்வாய்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக நேற்று திறக்கப்பட்ட தண்ணீர் பூலாம்பட்டி பில்லுகுறிச்சி பகுதிக்கு வந்த போது அப்பகுதி விவசாயிகள் கிடா வெட்டி மலர்தூவியும் வரவேற்பளித்து காவேரி தாய்க்கு நன்றி தெரிவித்து வழிபட்டனர்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூர் அணையிலிருந்து இடது மற்றும் வலது கரை கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி நேற்று மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்காக கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி பில்லுகுறிச்சி பகுதிக்கு தண்ணீர் வந்தபோது அப்பகுதி விவசாயிகள் முன்னாள் பேரூராட்சித் துணைத் தலைவரும், திமுக பேரூர் கழக செயலாளர் பழனிச்சாமி தலைமையில் ஆட்டுக்கிடா வெட்டி, மலர்தூவி தண்ணீரை உற்சாகமாக வரவேற்று காவிரி தாயை வணங்கி வழிபட்டனர்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதங்களில் பாசனத்திற்காக கால்வாய்களில் வரும் தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுமார் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயிகள் நெல் பயிரிட்டு பயன்பெறுவார்கள். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu