அதிமுக வேட்பாளர்களுக்கு தனித்தனியே ஆலோசனை வழங்கிய எடப்பாடி பழனிசாமி

அதிமுக வேட்பாளர்களுக்கு தனித்தனியே ஆலோசனை வழங்கிய எடப்பாடி பழனிசாமி
X

எடப்பாடி அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் நடைபெற்ற வேட்பாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.

எடப்பாடி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து தனித்தனியே ஆலோசனை வழங்கினார்.

தமிழகத்தில் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் நடைபெற்ற வேட்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் எடப்பாடி நகராட்சி மற்றும் கொங்கணாபுரம், பூலாம்பட்டி, ஜலகண்டாபுரம் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை வழங்கினார்.

அப்போது எடப்பாடி முன்னாள் நகர்மன்றத் தலைவர் கதிரேசன் நகர கழக செயலாளர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!