டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த எடப்பாடி திமுக வேட்பாளர்

டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த எடப்பாடி திமுக வேட்பாளர்
X
தமிழக முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமார் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

இதன் அடிப்படையில் நேற்று எடப்பாடி நகரம் தங்கம்மாள் ஆஸ்பிடல் கா. புதூர் அருந்ததியர் காலனி, தாவந்தெரு, ஆகிய பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து டீ கடையில் வேட்பாளர் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார் அப்போது அவர்,

குடும்ப தலைவிக்கு மாதம் 1000 உரிமை தொகை வழங்கப்படும், மகப்பேறு கால நிதி 24000 ஆக உயர்த்தப்படும், தொழில் பேட்டை அமைத்து தரப்படும், ஜவுளிபூங்கா அமைத்து தருவேன் என மக்களிடம் உறுதியளித்து வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில் திமுக தொண்டராகள் மற்றும் தோழமை கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!