ஏரி வேலை செய்யும் மக்களிடம் வாக்கு சேகரிப்பு

ஏரி வேலை செய்யும் மக்களிடம்  வாக்கு சேகரிப்பு
X
ஏரி வேலை செய்யும் மக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமார் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இதன் அடிப்படையில் இன்று எடப்பாடி ஒன்றியம் பக்கநாடு ஊராட்சி, ஆணைப்பள்ளம் கல்லுரல் காடு ஆகிய பகுதியில் ஏரிவேலை செய்த மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து அவர்களிடம் எடப்பாடி தொகுதி மக்களுக்கு முதியோர் உதவி தொகை 1000 லிருந்து 1500 ஆக உயர்த்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டசத்தாக பால் வழங்கப்படும். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யப்படும் என மக்களிடம் உறுதியளித்து வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare