தாதாபுரம் ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தாதாபுரம் ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அரசிமாதையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அரசிமாதையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வரும் ௯ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் அரசிமாதையன் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான பூட்டு சாவி சின்னத்தில் திமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதையன், தேர்தல் பெறுப்பாளரும் எடப்பாடி நகர மாவட்ட பிரதநிதி தங்கவேல், உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!