எடப்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எடப்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

வாக்கு எண்ணும் மையமான எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் கார்மேகம்.

எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்க்கான வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்யும் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் 59 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோர் எடப்பாடி நகராட்சி வாக்கு எண்ணும் மையமான எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
smart agriculture iot ai