சேலத்தில் ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலத்தில் ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
சேலம் எடப்பாடி பஸ் நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.

சேலம் அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்திலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக பஸ் நிலையத்தை சுற்றி வந்து பஸ் நிலையத்துக்கு முன்பு கூடிய ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது கண்டன கோஷமிட்டு ராசாவின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட தலைவர் செல்லத்துரை, எடப்பாடி முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன், அதிமுக நகர செயலாளர் முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்