/* */

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.2.66 கோடிக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.2.66 கோடிக்கு பருத்தி ஏல விற்பனையானது.

HIGHLIGHTS

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.2.66 கோடிக்கு பருத்தி ஏலம்
X

கொங்கணாபுரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கக் கிளை செயல்பட்டு வருகிறது.

இங்கு, நேற்று நடைப்பெற்ற பருத்தி மற்றும் எள் டெண்டரில் கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி சுற்றுவட்டார விவசாயிகளால் 90 மூட்டை எள் கொண்வரப்பட்டது. வெள்ளை எள் ரூ.84.60முதல் ரூ. 104.90 வரையிலும், சிகப்பு எள் ரூ. 83 முதல் ரூ. 101.20 வரையிலும் விலை தீர்ந்து ரூ. 6 லட்சத்திற்க்கு விற்பனை நடைப்பெற்றது.

பருத்தி டெண்டரில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, மாவட்ட விவசாயிகள் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். சுமார் 8000 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம் 1250 லாட்டுகளாக வைத்து ஏலம் விடப்பட்டது.

சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.8699 முதல் அதிகப்பட்சமாக ரூ.10329 வரையிலும், BT ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7299 முதல் அதிகபட்சமாக ரூ. 8189, வரையிலும் விலை தீர்ந்து மொத்தம் ரூ. 2.66 கோடிக்கு விற்பனை நடைப்பெற்றது. அடுத்த டெண்டர் வரும் சனிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Aug 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்