கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 2.68 கோடிக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்  2.68 கோடிக்கு பருத்தி ஏலம்
X

ஏலத்திற்காக அடுக்கி வைக்கப்பட்டடுள்ள பருத்தி மூட்டைகள். 

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 2.68 கோடிக்கு பருத்தி ஏலம் விற்பனையானது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை இன்று நடைப்பெற்ற பருத்தி மற்றும் எள் டெண்டரில் கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி சுற்றுவட்டார விவசாயிகளால் 35 மூட்டை எள் கொண்வரப்பட்டு வெள்ளை எள் ரூ.80.90முதல் ரூ.105.20 வரையிலும், சிகப்பு எள் ரூ.79.20 முதல் ரூ.100.40 வரையிலும் விற்றுத் தீர்ந்து ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது.

பருத்தி டெண்டரில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 8500 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு மொத்தம் 1300 லாட்டுகளாக வைத்து ஏலம் விடப்பட்டது. சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.8900முதல் அதிகப்பட்சமாக ரூ.10099 வரையிலும், பி.டி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7589 முதல் அதிகபட்சமாக ரூ.8249 வரையிலும் விற்று தீர்ந்து ரூ. 2.65 கோடிக்குக்கும், மொத்தம் ரூ 2.68 கோடிக்கு விற்பனை நடைப்பெற்றது. அடுத்த டெண்டர் 14.08.21 சனிக்கிழமை அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!