எடப்பாடி நகராட்சியில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு பணிகள் தீவிரம்

எடப்பாடி நகராட்சியில்  கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு பணிகள் தீவிரம்
X

மாதிரி படம்

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியினர் கொரோனா பரிசோனை மற்றும் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனை கட்டுபடுத்த தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடைவிதித்து ஒரு சில கட்டுபாடுகளுடன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று எடப்பாடி பஸ் நிலையம் அருகே நகராட்சி பணியாளர்கள் இருசக்கர மற்றும் நடந்து செல்பவர்கள் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்தும் கொரோனா பரிசோதனையை உடனடியாக மேற்கொண்டும் வருகின்றனர்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!