எடப்பாடி கோவில் ஊழியர் கொரோனாவுக்கு பலி- சக பணியாளர்களுக்கு முழுபரிசோதனை

எடப்பாடி கோவில் ஊழியர் கொரோனாவுக்கு பலி- சக பணியாளர்களுக்கு முழுபரிசோதனை

சேலம் எடப்பாடி ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோயில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் பணியாளர், கொரோனா பாதித்து பலியானதை அடுத்து, கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு இன்று முழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரொனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில், அரசு தீவிரம் காட்டி வருகிறது. அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் எழுத்தராக பணிபுரிந்து வந்த ரங்கநாதன் என்பவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார்.

இது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, சக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றால் பலியானதை அடுத்து, நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story