வேட்பாளரின் சகோதரர் போலீசாருடன் தகராறு : கண்டித்ததால் சாலை மறியல்
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் 26 வது வார்டில் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் பெருமாள் ராஜ் என்பவருடைய தம்பி பாண்டி கணேஷ் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
தன்னுடைய அண்ணன் பெருமாள்ராஜ் திமுக சார்பாக 26 ஆவது வார்டில் போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவாக ஆலச்சமம்பாளையம் வாக்குச் சாவடியில் வாக்காளர்களிடத்தில் தன்னுடைய அண்ணனுக்கு வாக்கு செலுத்துமாறு திமுக கட்சி வேட்டி அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் அவரிடம் விசாரிக்கும் பொழுது அவர் எதிர்பாராதவிதமாக கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் மீது கைப்படவே அவருடன் வந்த காவலர்கள் அவரை கைது செய்தனர். இதனால் பாண்டி கணேசன் உறவினர்கள் ஆலச்சம்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu