புற்றுநோய் பாதித்த மகனை விஷ ஊசி போட்டு கொலை: தந்தை உட்பட 3 பேர் கைது

கைது செய்யப்பட்ட தந்தை உட்பட 3 பேர்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் கட்சுப்பள்ளி கிராமம் கொடைகாரன் வளவு பகுதியை சேர்ந்த லாரி ட்ரைவரான பெரியசாமி, சசிகலா தம்பதியருக்கு இரண்டு மகன்கள் பெரிய மகன் செந்தமிழ், இளைய மகன் வண்ணத்தமிழ்(15) இளைய மகன் ஒரு வருடத்திற்கு முன் சைக்கிள் ஓட்டிச் செல்லும்போது ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தில் கால்எலும்பில் அடிபட்டது.
இதற்கு உள்ளூர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சிகிச்சை பயனளிக்காத நிலையில் சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்று ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் க்ரிட்டிக்கலான புற்றுநோய் எலும்பில் ஏற்பட்டுள்ளதாக வண்ணத்தமிழ் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் ஒரு வருடத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் புற்றுநோயால் அவதிபட்டு வந்த சிறுவன் வண்ண தமிழ் பெரும் சிரமப்பட்டு வந்துள்ளார். படுத்த படுக்கையாக தன் மகனை இந்த நிலைமையில் பார்க்க முடியாத நிலையில் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தந்தை பெரியசாமி கொங்கணாபுரம் லேப் அட்டெண்டர் பிரபு, மருந்துக்கடை உரிமையாளர் வெங்கடேசன் அழைத்து தன் மகன் வண்ணத் தமிழுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து கொங்கணாபுரம் காவல்துறையினருக்கு வந்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் காவல்துறையினர் தந்தை பெரியசாமி, லேப் அட்டெண்டர் பிரபு, மருந்துக்கடை உரிமையாளர் வெங்கடேசன் ஆகிய மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலை மற்றும் கொலை செய்ய உடந்தையாக இருந்தது ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu