கோயில் நிலங்களை மீட்பதில் அதிகாரிகள் தயக்கம்: அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன்
செட்டிமாங்குறிச்சி கிராமம் கோட்டை மேட்டில் உள்ள உலகநாதர் ஈஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன்.
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்பதில் திருத்தொண்டர் சபை நிறுவனர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் தீவிரம் காட்டி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக எடப்பாடி தாலுகாவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை ஆய்வு செய்து அளவீடு செய்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு வருகை தந்த அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வேடியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் இதுவரை கோயில் நிலங்களை மீட்கப்பட்ட விபரம் மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து எடப்பாடி வட்டாட்சியர் விமல்பிரகாசம், நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் ஆய்வாளர் ஜோதிலட்சுமி மற்றும் வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோருடன் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் செட்டிமாங்குறிச்சி கிராமம் கோட்டை மேட்டில் உள்ள உலகநாதர் ஈஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பதில் அரசு அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu