எடப்பாடி ஒன்றியங்களில் அதிமுகவின் 50வது ஆண்டு விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எடப்பாடி ஒன்றியங்களில் அதிமுகவின் 50வது ஆண்டு விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

கோரணம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

எடப்பாடி நகர, ஒன்றியங்களில் அதிமுகவின் 50வது ஆண்டு விழாவை ஒட்டி இனிப்பு வழங்கி வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவின்படி தமிழகம் முழுவதும் அதிமுகவின் 50வது ஆண்டு விழாவினை கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!