சேலம், பூலாம்பட்டியில் ஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய காவிரிக்கரை

சேலம், பூலாம்பட்டியில் ஆடிப்பெருக்கில்   வெறிச்சோடிய காவிரிக்கரை
X

கொரோனா தொற்றால் சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் ஆடிபெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் ஆடிபெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி நெடுங்குளம் ஆகிய பகுதிகளில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது.

ஆடிப்பெருக்கு விழாவில் பூலாம்பட்டி மற்றும் கோனேரிப்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி தங்களது குல தெய்வங்களின் உடைமைகள் மற்றும் உற்சவ மூர்த்திகளை காவிரியில் சுத்தம் செய்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு எடுத்துச்செல்வது வழக்கம்.

அந்த வகையில் ஆர்வத்தோடு இருந்த பொதுமக்களுக்கு கொரோனா தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பூலாம்பட்டி பேரூராட்சி கரையோரப் பகுதிகளில் புனித நீராடவும், ஆற்றில் இறங்கி குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. அதனால், இன்று ஆடிப்பெருக்கு விழாவில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பூலாம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர், பணியாளர்கள், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil