பூலாம்பட்டி: காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பூலாம்பட்டி: காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

 எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த வாலிபர் செல்வேந்திரன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறை விசாரணை.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி, வனவாசி பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் 4 பேர் எடப்பாடியை அடுத்து பூலாம்பட்டி காவிரி ஆற்றிற்கு நண்பர்களுடன் வந்து குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது காவிரி ஆற்றின் ஆழம் தெரியாமல் இறங்கிய போது நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளனர். அதில் மூன்று பேர் சுதாரித்துக்கொண்டு அதிர்ஷ்டவசமாக கரைக்கு வந்தடைந்தனர்.

ஆனால் செல்வேந்திரன் (18) என்ற வாலிபர் மட்டும் நீரில் மூழ்கிவிட்டதாக பூலாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் எடப்பாடி தீயணைப்புத்துறை வீரர்களுடன் இணைந்து நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு செல்வேந்திரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து உடன் குளிக்க வந்த தீபக், விக்னேஷ், குமரன் ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நான்கு பேரும் இந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பூலாம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business