காய்கறி சந்தையில் கலெக்டர் ஆய்வு

காய்கறி சந்தையில் கலெக்டர் ஆய்வு
X

கொரோனோ வைரஸ் நோய் தொற்று மீண்டும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்நோய் பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். என்பதை வலியுறுத்தி சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் அனைவரும் முக கவசம் அணிந்து உள்ளனரா என மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முக கவசம் அணியாதவர்களுக்கு முக கவசங்களை வழங்கினார். தொடர்ந்து நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள அவசியம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!