அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி- முதல்வர்

அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி- முதல்வர்
X

அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என எடப்பாடியில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி தனலிங்கத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,நிதி பற்றாக்குறையாக உள்ள போது ஆறு சிலிண்டர்கள் தருவதாக தெரிவித்து இருக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், இந்தியா முழுவதுமே கடன்சுமை இருக்கின்றது. அனைத்து மாநிலங்களிலும் கடன் சுமை உள்ளது. ஆனால் வளர்ச்சிப்பணிகள் தொய்வு அடையாமல் செய்து இருக்கின்றோம் என்றார். அதிமுக கூட்டணி குறித்து கேட்டதற்கு அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்றார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டார்.மேலும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக அதிமுக அரசு இருக்கும். சிஏஏ குறித்து மத்தியில் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.தேர்தல் அறிக்கை பொதுமக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது.

எடப்பாடி தொகுதி மக்கள் வறட்சியான காலத்தில் ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்று மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 100 ஏரிகளுக்கு கொண்டுவரும் திட்டம்த்திற்கு நிதி ஒதுக்கி தொடங்கப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் எடப்பாடி தொகுதி, சங்ககிரி தொகுதி, மேட்டூர், ஓமலூர் ஆகிய தொகுதி மக்கள் பயனடைவார்கள். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!