மகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை

மகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை
X

எடப்பாடி அருகே மகளை கத்தி மற்றும் சுத்தியால் அடித்து கொலை செய்து விட்டு மாடியில் இருந்து குதித்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தாதாபுரம் கிராமம் ஆதிகாடுரை சேர்ந்தவர் கோபால் (54) காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மணி (50) என்ற மனைவியும் ரமேஷ் கண்ணன் (21) என்ற மகன், பிரியா (15) என்கிற மகளும் உள்ளனர். பிரியா தாதாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மகன் ரமேஷ் கண்ணன் செட்டிமங்குறிசி அம்மன் கோயில் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கோபால் மனைவி மணி ஈரோடு மாவட்டத்தில் தங்கல் வேலைக்கு கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்வதற்காக சென்றுவிட்டார்.

கடந்த 2 மாதமாக கோபால் தனது மகன், மகளோடு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கோபாலும், பிரியாவும் வீட்டில் இருந்துள்ளனர். மகன் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை 4 மணி அளவில் கோபால் தனது தம்பி சுகந்திரனிடம் நான் பிரியாவை சுத்தியால் அடித்து கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். உடனடியாக சுகந்திரன் வீட்டில் வந்து பார்க்கும் போது ரத்த வெள்ளத்தில் பிரியா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுது உள்ளார்.

கோபால் திடீரென அவர் வீட்டின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து அதிர்ந்து போன அவரது தம்பி மற்றும் உறவினர்கள் எடப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். எடப்பாடி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story