தொடர் மழை எதிரொலி: சேறும், சகதியுமாக மாறிய தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்
சேறும் சகதியுமாக மாறிய தலைவாசல் மார்க்கெட்
சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் சுமார் 100ஆண்டுகளுக்கு மேலாக தினசரி பெரிய மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது,
இந்த மார்க்கெட்டுக்கு உள்ளுர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சில்லரை வியாபாரிகள் மினி சரக்கு வாகனங்களில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்
தற்போது கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் மழைநீர் குட்டையாக தேங்கி சேறும் சகதியுமாக காணப்படு வதால் வெளியூரிலிருந்து வரும் சில்லரை வியாபாரிகள் காய்கறிகளை தாங்கள் கொண்டு வந்த மினி ஆட்டோவில் ஏற்றிச் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள்.
மேலும் காய்கறிகளை வாங்கவதற்கு கூட நடந்து செல்லமுடியாமல் சேற்றிலேயே நடந்து சென்று வாங்கிய அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் இருகிறது.
எனவே உடனடியாக அதிகாரிகள் சேறும் சகதியுமாக உள்ள மார்க்கெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மார்கெட்டை சரிசெய்யாவிட்டால் சிஐடியு, மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கங்கள் இணைந்து சேற்றில் நாற்று நடும் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu