தீபாவளி: சேலம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி: சேலம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
X

கோப்பு படம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், தர்மபுரி நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தினமும் 1900 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதனை ஒட்டி, வார விடுமுறையும் வருகிறது. தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூர், மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த சிறப்பு பேருந்துகள் வரும் 30ம் தேதி முதல், அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கூட்டத்திற்கு ஏற்றவகையில் கூடுதல் பேருந்துகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். பேருந்தில் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து, கொரானா தொற்றின் வழிகாட்டு நெறிமிறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
is ai the future of computer science