சேலம் மாவட்டத்தில் ஒரேநாளில் 18 பேர் கொரோனாவுக்கு பலி

சேலம் மாவட்டத்தில்  ஒரேநாளில் 18 பேர் கொரோனாவுக்கு  பலி
X
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 18 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3475 ஆக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டு 43 ஆயிரத்து 832 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 475 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 622 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரேநாளில் சேலம் மாவட்டத்தில், கொரானாவால் 622 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினந்தோறும் சேலம்அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்சிஜன் வசதி இல்லாததாலும், படுக்கை வசதிகள் கிடைக்காததாலும் ஆம்புலன்சில் இருந்த படியே நோயாளிகள் உயிரிழப்பது வாடிக்கையாக தொடர்ந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்சிஜன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil