சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
X
மின் பராமரிப்பு பணி காரணமாக, நாளை சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தபடுவதாக, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும், மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (24.06.2021) நடைபெற உள்ளது. இதனால், நாளை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படுவதால், நாளை தனிக்குடிநீர் திட்டம் செயல்படாது என்றும், நாளை ஒருநாள் மட்டும் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture