சேலத்தில் 55 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானது

சேலம் மாவட்டத்தில் 27ம் தேதி மட்டும் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் இன்று(27ம்தேதி) ஒரே நாளில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சையில் குணமடைந்து 41 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 33ஆயிரத்து 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 32 ஆயிரத்து 553 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 277 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 468 ஆக உள்ளது. நாளுக்கு நாள் கொரோனோ தோற்று திகரித்து வருவதால் பொதுமக்கள் இடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!