சேலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது

சேலத்தில் தினசரி கொரோனா  பாதிப்பு ஆயிரத்தை கடந்தது
X
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 1009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1733 ஆக உள்ளது. மேலும் 509 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,03,019 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,487 ஆக உயர்ந்த நிலையில், மாவட்டத்தில் 4,735 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று ஆயிரத்தை கடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!