சேலம் மாவட்டத்தில் ஒரேநாளில் புதிதாக 785 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில்  ஒரேநாளில் புதிதாக 785 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 785 பேர் பாதிக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில் புதிதாக 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1733 ஆக உள்ளது. மேலும் 268 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,02,116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,555 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் 3,706 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் 532 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். தொடர்ந்து ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா நோய் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!