தொடர் கனமழை: சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை: சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X
சேலம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (27.11.2021) விடுமுறை - ஆட்சித்தலைவர் கார்மேகம்.

சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (27.11.2021) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் இரவு முதல் மழை பெய்து வருகிறது.

இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (27.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்