சேலம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை வேட்புமனு தாக்கல் விவரம்

சேலம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை வேட்புமனு தாக்கல் விவரம்
X

பைல் படம்.

சேலம் மாநகராட்சியில் (60 வார்டுகள்) இன்று வரை மொத்தம் 402 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுத்தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைவதால், சேலம் மாவட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, சேலம் மாநகராட்சியில் (60 வார்டுகள்) இன்று வரை மொத்தம் 402 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆறு நகராட்சிகளில் (165. வார்டுகள்) இன்று வரை மொத்தம் 467 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

31 பேரூராட்சிகள் (474 வார்டுகள்) இன்று வரை மொத்தம் 1,404 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story