சேலம் மாநகராட்சி: கொரோனா சிகிச்சை மையங்களில் 656 படுக்கைகள் காலி..!

சேலம் மாநகராட்சி:  கொரோனா சிகிச்சை மையங்களில்  656 படுக்கைகள் காலி..!
X
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள கொரோனோ சிகிச்சை மையங்களில் 656 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனோ சிகிச்சை மற்றும் வழிகாட்டுதல் மையங்களில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்த விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சோனா கல்லூரி மையத்தில் 49 படுகைகளும், தொங்கும் பூங்கா பகுதியில் உள்ள மையத்தில் 135 படுக்கைகளும், காந்தி மைதானத்தில் உள்ள மையத்தில் 126 படுக்கைகளும், அரசு மகளிர் கல்லூரி சித்தா மையத்தில் 149 படுக்கைகளும், பொன்னம்மாபேட்டை ஐஐஎச்டி மையத்தில் 86 படுக்கைகளும், மணியனூர் பகுதியிலுள்ள சட்டக்கல்லூரியில் 111 படுக்கைகள் என மொத்தம் 656 படுக்கைகள் காலியாக உள்ளது என்றும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனை செல்லும் முன் கொரோனோ வகைப்படுத்தும் மையத்திற்கும் நேரடியாகச் சென்று தங்களை வகைப்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!