சேலம் மாவட்டத்தில் தரிசை சாகுபடி நிலமாக மாற்றும் திட்டம் அமல்

கோப்பு படம்
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் , வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டத்தில் 2021-22 ஆம் நிதி ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வாயிலாக, 370 எக்டர் பரப்பளவில் ரூ .54.28 இலட்சம் செலவில் மான்ய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுவதற்கு மானியங்கள் வழங்கப்படுகிறது . முட்புதர்களை அகற்றுதல் , நிலத்தை சமன்செய்தல் , உழவு பணிகள் , விதை . உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கலவை விநியோகங்களுக்கு இந்த மானியங்கள் வழங்கப்படுகிறது.
தரிசு நிலங்களில் சிறுதானியங்கள் 200 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, ரூ .26.80 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் பயிர் சாகுபடிக்கு எக்டருக்கு ரூ .13,400 / மானியமாக வழங்கப்பட உள்ளது. பயறு வகைகள் 120 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு ரூ .16,08 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பயறு வகைகள் பயிர் சாகுபடிக்கு எக்டருக்கு ரூ .13,400 / மானியமாக வழங்கப்பட உள்ளது.
நிலக்கடலை 50 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு ரூ .11.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நிலக்கடலை பயிர் சாகுபடிக்கு எக்டருக்கு ரூ .22,800 / மானியமாக வழங்கப்பட உள்ளது. எனவே தரிசு நிலங்களில் மேற்குறிப்பிட்டுள்ளபடி பயிர் சாகுபடி செய்ய, விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu