ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் வீடியோ வைரல்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமப் பகுதியில் கல்வராயன்மலையின் தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி , வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில், பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் ஆத்தூர் கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து மகிழ்ச்சியாக கொண்டாடி செல்கின்றனர்.
இதனையடுத்து ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளனர். அப்போது கல்வராயன்மலை பகுதியில் பெய்த தொடர் மழைக்காரணமாக ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் திடிரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த ஒரு பெண் கைக்குழந்தை உள்பட 4பேர் சிக்கி கொண்டனர். அப்போது அவர்கள் காப்பாற்றுமாறு சத்தமிட்டனர்.
மேலும் அங்குள்ளவர் அவர்களை மீட்க நீர்வீழ்ச்சியின் ஒருபுறமாக உள்ள பாறை மீது ஏறியுள்ளனர். கை குழந்தையுடன் தாயையும் மீட்டுள்ளனர். அப்போது பாறை வலுக்கி இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்துனர். பினனர் அந்த இரண்டு இளைஞர்களும் நீரில் நீந்தி வந்து கரை சேர்ந்தனர். இவர்கள் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu