காதலிக்க மறுத்த மாணவி: புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது

காதலிக்க  மறுத்த  மாணவி: புகைப்படத்தை  இணையதளத்தில் வெளியிட்ட வாலிபர்  கைது
X

கைது செய்யப்பட யுவராஜ்.

காதலிக்க மறுத்த மாணவியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு மிரட்டிய வாலிபர் கைது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியுடன், தென்னங்குடிபாளையம் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் ( 19 ) என்கிற வாலிபர் மாணவியுடன் நட்பாக பழகி அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதன் பின்னர் காதலிக்க வில்லையெனில் சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிடுவதாக மாணவியை யுவராஜ் மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆத்தூர் ஊரக காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அப்போது யுவராஜ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று கூறியதால் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் யுவராஜ் தனது முகநூல் பக்கத்தில் மாணவியின் புகைப்படத்தை பதிவிட்டு தன் மனைவி என பதிவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் யுவராஜீடம் கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மீண்டும் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் யுவராஜ் கைது செய்து, அவர் மீது மீது கொலை மிரட்டல் உள்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

Tags

Next Story