ஆத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

ஆத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 3 ஆண்டு சிறை
X

சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாக்யராஜ்.

ஆத்தூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்த பாக்யராஜ். இவர் கடந்த 17-2-2014 ஆம் தேதி புங்கவாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.

மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக வாலிபர் பாக்யராஜ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் இன்று தீர்ப்பு வழங்கி குற்றவாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!