Begin typing your search above and press return to search.
போலீஸார் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு. சம்பவ இடத்தில் நடந்தது என்ன மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
போலீஸார் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு. சம்பவ இடத்தில் நடந்தது என்ன மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
HIGHLIGHTS
சேலத்தில் போலீசார் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு, சம்பவ இடத்தில் நடந்தது என்ன ? சமூக வளைத்தலங்களில் வைரலாகும் வீடியோ
சேலம் அருகே பாப்பநாயக்கன்மபட்டி சோதனைசாவடியில் போலீசார் தாக்கியதில் விவசாயி முருகேசன் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்கிற வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் விவசாயி முருகேசன் மது போதையில் ரோட்டில் ரகளை செய்வதும், அதனைத்தொடர்ந்து பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி அவரை பிரம்பால் தாக்கும் காட்சிகள் மற்றும் அவர் சாலையில் மயங்கி விழும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.