புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
ஆத்தூரில், புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான இன்று, சென்னையில் இருந்து சேலத்திற்கு வருகை தந்த முதலமைச்சர், நோய் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை, வாழப்பாடியில் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, ஆத்தூரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்மூலம் ஆத்தூர் நகராட்சி, நரசிங்கபுரம் நகராட்சி, தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூர், தம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய இரண்டு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மக்கள் பயனடையவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை, போக்குவரத்து துறை, பள்ளிக்கல்வித்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 55கோடியை 26 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 29 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் போக்குவரத்துத் துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பாக 23 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் 13 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu