வீட்டை விட்டு துரத்திய காதல் கணவர்:கர்ப்பிணி பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

வீட்டை விட்டு துரத்திய காதல் கணவர்:கர்ப்பிணி பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
X

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த கர்ப்பிணி பெண் பிரியங்கா.

சேலத்தில் வரதட்சணை கேட்டு துரத்திய காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிகர்ப்பிணி பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் பெத்தநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. பட்டதாரியான இவர், அதே பகுதியை சேர்ந்த ராஜமுத்து தன்னை காதலித்து கர்ப்பாமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் வரதட்சணை கேட்டு தொடர்ச்சியாக அவரது கணவர் அடித்து கொடுமை படுத்தியதோடு பிரியங்காவை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி பெண், தனது காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு உரிய இழப்பீட்டை கணவரிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!